தரைமட்டக் கிணற்றுக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

0 1671

உளுந்தூர்பேட்டை அருகே, தரைமட்டக்கிணற்றுக்குள் தவறிவிழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஏழுமலை - கிருஷ்ணவேணி தம்பதியர் தங்களின் மூன்றாவது குழந்தையை கிருஷ்ணவேணியின் தாயார் ஜானகியின் பராமரிப்பில் விட்டுவிட்டு சென்னையில் தங்கி கூலி வேலை செய்துவந்தனர். குழந்தை அய்யனாரை மரத்தடியில் விளையாட விட்டுவிட்டு, ஜானகி விவசாய பணிகளை கவனித்தபோது, அந்த குழந்தை அருகிலிருந்த தரைமட்டக்கிணறுக்குள் தவறிவிழுந்ததாக கூறப்படுகிறது. .

ஜானகியின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் 75 அடி ஆழ கிணற்றுக்குள் குதித்து குழந்தையைத் தேடத் தொடங்கினர். தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் உடலை சடலமாக மீட்டனர்.

ஏழுமலை - கிருஷ்ணவேணி தம்பதியருக்கு இதற்கு முன் பிறந்த இரு குழந்தைகளும், சிறுவயதிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது மூன்றாவது குழந்தையும் உயிரிழந்தது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments