சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு..!
கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகேயுள்ள கூலிக்கடவு - சித்தூர் சாலையில், நெல்லிபதி என்ற இடத்தில் 5 அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருவதாகவும் 90 விழுக்காடு பணிகள் முடிந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. இந்த அணை மட்டுமின்றி, மேலும் இரண்டு தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டு இருக்கின்றார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளதால், உடனடியாக தமிழக அரசு தலையிட வேண்டும் என கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணைய கட்டுப்பாட்டில் வரும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே ஆணையத்தின் அனுமதியின்றி தடுப்பணை கட்டப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஏற்கனவே சிறுவாணி அணையில் மழை காலங்களில் முழு கொள்ளளவை 52 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க விடாமல் கேரளா அரசு தடுத்து வருகிறது.
Comments