ஓய்வூதியம் பெற பல கி.மீ. தொலைவுக்கு வெறும் காலில் சென்ற மூதாட்டி..!

0 2258

ஒடிசாவில் மூதாட்டி ஒருவர், முதியோர் ஓய்வூதியத்தைப் பெற வங்கிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு, உடைந்த நாற்காலியை ஊன்றி, வெறும் காலில் சென்றது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. அப்படி சென்றும் ஓய்வூதிய தொகை கிடைக்காமல் ஏமாற்றமடைந்தார்.


நப்ராங்பூர் மாவட்டத்தின் ஜரிகோன் கிராமத்தில் வசித்து வரும் 70 வயதான சூர்யா ஹரிஜன் என்ற மூதாட்டி தனது இளைய மகனின்குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் முதியோர் ஓய்வூதியம் பெற பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பெரும் சிரமத்துடன் சென்றார். ஆனால் மூதாட்டியின் கையொப்பம் வங்கி பதிவின்படி இல்லாததால் பணம் தராமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இது பற்றி விளக்கம் அளித்துள்ள வங்கி அதிகாரி, மூதாட்டியின் விரல் பாதிக்கப்பட்டுள்ளதால் பணம் பெறுவதில் சிக்கல் இருந்ததாகவும் விரைவில் இப்பிரச்சினை சரி செய்யப்படும் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments