இந்தியாவில் ரமலான் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈத் உல் பித்ர் எனப்படும் ரமலான் பெருநாள் நாளை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
30 நாட்கள் நோன்பிருந்து கொண்டாடப்படும் ரமலான் திருநாள் பிறை கண்டவுடன் கொண்டாடப்படும். அதன்படி வியாழன் அன்று பிறை சவுதி அரேபியாவில் காணப்பட்டதால் அங்கு இன்று பெருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நாளை ரமலான் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மசூதிகளிலும், திறந்த வெளிதிடல்களிலும் ஈத் உல் பித்ர் எனப்படும் ஈகைத்திருநாள் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments