காவிரி குடிநீர் குழாய் துண்டிப்பு.. 35 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 9 மாதங்களாக குடிநீரின்றி தவிப்பு..!
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் சாலை விரிவாக்கப் பணி காரணமாக காவிரி குடிநீர்க் குழாய் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 35 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 9 மாதங்களாக குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.
குண்டடத்திலிருந்து மேட்டுக்கடை ஜம்பிற்கு வரும் காவிரி குடிநீர் குழாய் முற்றிலும் பழுதாகிப் போனதால் இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விஷயத்தில் அரசு தீவிரம் காட்டி குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments