ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் குவிப்பு..!
ஜம்மு காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் கிராமம் கிராமமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்டதில் 5 பேர் பலியானார்கள். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
இதனிடையே, ரஜோரி, பூஞ்ச் மற்றும் மெந்தர் ஆகிய பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து எல்லைத் தாண்டி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவர்கள் மீண்டும் எல்லை கடந்து தப்பி விடாமல் இருக்க அப்பகுதிமுழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையை மூடி அங்கு வாகனப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தேசிய புலனாய்வு அதிகாரிகள் பூஞ்ச் பகுதிக்கு விரைந்து தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Comments