டிக்கெட்டுக்கு 6 ரூபாய் கூடுதல்.. வீடியோவால் வெளியான உண்மை..! அரசு பேருந்து நடத்துனர் சிக்கினார்

0 5338

அரசு பேருந்து பயணிகளிடம் அரசு நிர்ணயித்ததை விட டிக்கெட்டுக்கு 6 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துனர் வீடியோவில் சிக்கிய நிலையில் , கூடுதலாக வசூலித்த கட்டணத்தை ஒருவருக்கு மட்டும் திருப்பிக் கொடுத்த சம்பவம் திசையன்விளையில் அரங்கேறி உள்ளது.

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் அரசு பேருந்து ஒன்று திசையன்விளை பேருந்து நிலையம் வந்துள்ளது. திசையன் விளையில் இருந்து நாகர் கோவிலுக்கு 25 ரூபாய் கட்டணம் என்ற நிலையில் பணியில் இருந்த நடத்துனர் ஆதிலிங்கம், பயணிகளிடம் 31 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து 6 ரூபாய் கூடுதலாக வசூலிப்பது ஏன் என்று கேட்டு பயணி ஒருவர் வீடியோ எடுத்தபடியே வாக்குவாதம் செய்தார்.

தனது டெப்போவில் கொடுக்கப்பட்டுள்ள கட்டண விவர பட்டியல் அடிப்படையில் தான் வசூலிக்கிறேன் என்று நடத்துனர் கூற, நேற்று வந்தேன் 25 ரூபாய் கட்டணம்..., இன்று எப்படி 31 ரூபாய் ஆனது., பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டதா? எனக் கேட்டு அந்த பயணி வாக்குவாதம் செய்தார்.....

இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து அந்த பயணி முக நூலிலும் பதிவிட்டார். நடந்த சம்பவம் குறித்து நடத்துனர் ஆதிலிங்கம் கூறும் போது வள்ளியூர் பாலம் வேலை நடந்தபோது சுற்றி செல்வதற்காக 31 ரூபாய் கட்டணமாக நிர்ணாயிக்கப்பட்டுள்ளது. தற்போது நேர்வழி என்பதால் 25 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது. தவறுதலாக பழைய பட்டியலை வைத்து பயணக்கட்டணம் வசூலித்து விட்டேன், நிலவரத்தை விளக்கி கூறி கூடுதலாக அந்த பயணியிடம் பெற்ற கட்டணத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாக, நடத்துனர் ஆதிலிங்கம் தெரிவித்தார்..

கேள்வி கேட்டவருக்கு மட்டும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் முதலில் நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு பேருந்து சென்ற போது பழைய பட்டியலின் படி பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு.? அன்றையதினம் பணத்தை டெப்போவில் ஒப்படைக்கும் போது நிச்சயம் டிக்கெட் தொகையை விட கூடுதலாக பணம் இருந்திருக்கும்..! இப்படி கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் யாரிடம் கொடுக்கப்பட்டது? சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் எப்போது திருப்பிக் கொடுக்கப்படும்? என்பதே அந்த பேருந்தில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணித்தவர்களின் எதிர்பார்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments