உக்ரைன் தலைநகர் கீவ் வான்பரப்பில் திடீரென தோன்றிய ஒளிப்பிழம்பு..
உக்ரைன் தலைநகர் கீவில், நேற்று இரவு திடீரென பிரகாசமான ஒளிப்பிழம்பு தோன்றியதால், அந்நகர மக்கள் பதற்றமடைந்தனர்.
நேற்று இரவு 10 மணியளவில், கீவ் வான்பரப்பில் பிரகாசமான ஒளிப்பிழம்பு தோன்றியதையடுத்து, மக்களை எச்சரிக்கும் வகையில் விமானத்தாக்குதலுக்கான சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டன.
எனினும் வான்பாதுகாப்பு சாதனங்கள் செயல்படுத்தப்படுத்தப்படவில்லை என இராணுவ நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
நாசாவின் செயலிழந்த RHESSI செயற்கைக்கோள் அல்லது விண்கல் கீவ் வான் பரப்பில் நுழைந்து எரிந்து விழுந்ததால் ஒளிப்பிழம்பு தோன்றியிருக்கலாம் என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
Comments