புத்தரின் போதனைகளால் உத்வேகம் அடைந்து உலக நலனுக்காக புதிய முயற்சிகளை எடுத்தது இந்தியா - பிரதமர் மோடி
புத்தரின் போதனைகளால் உத்வேகம் அடைந்து, உலக நலனுக்காக பல்வேறு புதிய முயற்சிகளை இந்தியா எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்றும், நாளையும் 2 நாள்கள் முதலாவது உலக புத்தமத மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள புத்தர் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, புத்தரின் போதனைகள், உலகம் முழுவதும் வாழும் எண்ணற்ற மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
உலகமே இன்று போராலும், பல்வேறு பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான தீர்வை பல நூறாண்டுகளுக்கு முன்பே புத்தர் அளித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
உலகத்துக்கு இந்தியா யுத்தத்தை அளிக்கவில்லை, புத்தரையே அளித்துள்ளது என்றும் கூறிய பிரதமர், புத்தரின் பாதையானது, எதிர்காலம் மற்றும் நிலைத்தன்மைக்கான பாதை என்றும் தெரிவித்தார்.
Comments