சாலையில் ஒன்றோடொன்று உரசிய 2 பைக்குகள் நிலைதடுமாறி சாய்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

0 1939

கன்னியாகுமரி அருகே, சாலையில் ஒன்றோடொன்று உரசி நிலைதடுமாறி சாய்ந்த பைக்குகள் மீது பிக்கப் வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

திருவட்டார் பகுதியைச் சேர்ந்த பொறியாளரான ஆல்பின் என்பவர், தனது வீட்டின் கிரஹபிரவேச நிகழ்ச்சிக்காக வந்த நண்பர்களை அழைத்து வருவதற்காக, இன்று அதிகாலை, தனது நண்பர்களுடன் 2 பைக்குகளில் நாகர்கோவில் நோக்கிச் சென்றுள்ளார்.

வில்லுக்குறி பகுதியில் அதிவேகமாக சென்ற போது இவர்களது பைக்குகள் ஒன்றோடொன்று உரசி நிலைதடுமாறி சாய்ந்ததில், 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

அச்சமயம் எதிரே வந்த பிக்கப் வேன் ஏறி இறங்கியதில், ஒரு பைக்கில் பயணித்த ஆல்பின் மற்றும் ராகுல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மற்றொரு பைக்கில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments