வழியில் எத்தனை குழிகளடா.. குழியால் எத்தனை வலிகளடா.. சறுக்கிய சாதனையாளர்..! ஸ்மார்ட் சிட்டி பாவங்கள்

0 2544

இந்தியா முழுவதும் 19 ஆயிரம் கிலோ மீட்டர் ஒற்றை கையில் சைக்கிள் ஓட்டிய மாற்றுத்திறனாளி சாதனையாளர் ஒருவர், சென்னையின் சாலையில் நடுவே உடைந்து சிதைந்திருந்த பாதாள சாக்கடை மூடியின் கம்பிகளில் சிக்கி சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது..

சென்னை வியாசர்பாடி பகுதியியயை சேர்ந்தவர் தமீம் அன்சாரி, தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட ஒரு கை இழந்த மாற்றுதிறனாளியான இவர் தன்னம்பிக்கை ஏற்படுத்தும்விதமாக இந்தியா முழுவதும் 19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து வரும் சைக்கிளிங் சாதனையாளர்.

தற்போது குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் பார்வைத்திறனை இழப்பதுடன், உடல் நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வருகின்ற 24ம் தேதி சென்னை பெருங்குடியில்,தொடங்கி தாம்பரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் புதன்கிழமை இன்று இரவு சுமார் 9:30 மணியளவில் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்ட அன்சார் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

சென்னை வியாசர்பாடி அடுத்த சர்மாநகர் ஜி என் டி சாலையில் வந்த போது சாலையின் நடுவே சிதிளமடைந்து கட்டுமான கம்பி வெளியே தெரியும் நிலையில் கிடந்த பாதாள சாக்கடையின் மேல்மூடியின் மீது சைக்கிள் மோதிய வேகத்தில் அன்சாரி ஓட்டி வந்த சைக்கிளின் முன் பக்க சக்கரம் சிக்கி நிலைததடுமாறி சாலையின் பக்கவாட்டில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

தூக்கிவீசப்பட்டவரை வாகன ஓட்டிகள் தண்ணிர் கொடுத்து எழுப்பி முதலுதவி செய்துள்ளனர். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டதுடன், அவரது ஸ்மார்ட் போன் உடைந்து சேதமடைந்துள்ளது.

பல ஆயிரம் கிலோ மீட்டர் ஒற்றை கையில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தவர், ஸ்மார்ட் சிட்டியான சென்னையின் சாலையில் எப்படி விழுந்தோம் என்று எழுந்து வந்து தான் விழுவதற்கான காரணம் குறித்து மற்றொரு செல்போன் மூலம் வேதனையுடன் கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் இது போன்று சிதிலமடைந்தும், சரியாக மூடப்படாமலும், அல்லது சாலையின் நடுவே மலைக் குன்று போலவும் வைத்து மூடப்பட்டிருப்பது பல வாகன ஓட்டிகளை பதம் பார்த்து வருகின்றது.

குறிப்பாக தரமற்ற பாதாள சாக்கடை மூடிகள் மீது அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் செல்வதால் எளிதாக சேதம் அடைந்து விடுவதாகவும் இதனை சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அதிகாரிகள் கவனித்து உடனடியாக சரி செய்வதில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்

சைக்கிளிங் சாதனையாளர் தமீம் அன்சாரி கேள்வி எழுப்பிய காணொளி சமூக வளைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments