சோட்டா ராஜனின் முக்கியக் கூட்டாளியை அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள்
நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் முக்கியக் கூட்டாளி அபு சாவந்த் என்பவரை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் இருந்து இந்தியா அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரில் ஓட்டல் நடத்தி 22 ஆண்டுகளாக சோட்டா ராஜனின் கருப்புப்பணத்தை மாற்றுவது, மற்றும் நிதி நிலவரங்களை கவனித்து வந்ததாக அபு சாவந்த் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில் சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்து இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுத்தது. சிங்கப்பூரில் இருந்து இந்தியா கொண்டு வர பத்தாண்டுகளுக்கும் மேலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Comments