சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எஸ்.வி. கங்காபூர்வாலா
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலாவை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, டி ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் வி கங்காபூர்வாலாவை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
எஸ்வி கங்காபூர்வாலா தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். கொலீஜியம் பரிந்துரை சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
Comments