ஜி 20 மாநாட்டில் சுகாதாரத்துறையில் 3 அம்சங்களை வலியுறுத்தியது இந்தியா
கோவாவின் பனாஜி நகரில் நிறைவு பெற்ற ஜி 20 மாநாட்டில், சுகாதார அவசர நிலைகளைத் தவிர்த்தல், சுகாதார சூழலுக்குத் தயார் நிலையில் இருந்து உடனடியாக கவனித்தல், மற்றும் மருந்து உற்பத்தித் துறைகளில் தரமான, நியாயமான விலையில் மருந்துகள் கிடைக்க ஒத்துழைப்பு வழங்குதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தியது.
இது தொடர்பான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு பங்கேற்ற உறுப்பு நாடுகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் குஜராத்தின் காந்தி நகரில் நடைபெறும் ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் முன்பு பல்வேறு நாடுகளின் கருத்துகளைக் கேட்டு செம்மைப்படுத்தப்படும் என்றும் பூஷண் தெரிவித்துள்ளார்.
Comments