நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்...? மெக்ஸிகோ நகர மக்களுக்கு பயிற்சி
நிலநடுக்கம் ஏற்பட்டால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மெக்ஸிகோ நகர மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்படி நிலநடுக்கம் குறித்த அலாரம் ஒலிக்கப்பட்ட உடன் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவத்துறையினரும் காயமடைந்தவர்களுக்கு சிகிக்சை அளிப்பது போன்று நடித்துக் காட்டினர். முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு மெக்ஸிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Comments