உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா..
உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியகம் வெளியிட்ட அறிவிப்பில், 142 கோடியே 57 லட்சம் மக்கள் தொகை கொண்ட சீனாவை விட இந்தியாவில் 29 லட்சம் பேர் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுடையவர்கள் என்றும், 25 சதவீதம் பேர் 14 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு ஆய்வுகளின்படி, அடுத்த 30 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் மக்கள்தொகை அதிகரித்து 165 கோடியாக உயரும் என்றும், அதன்பிறகு படிப்படியாக குறைய தொடங்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Comments