பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆளுநர் அஞ்சலி

0 3252

இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் சென்ற ஆளுநர் ஆர்.என் ரவி, பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ஆளுநரை இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இதனை தொடர்ந்து, பசும்பொன் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் முத்துராமலிங்க தேவரின் பூர்வீக வீட்டிற்குள் சென்று பூஜை அறை, வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை ஆளுநர் ஆர்வமுடன் பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments