சித்திரை தேரோட்டத்தின் போது சாலையில் சூடம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு.. பூட்ஸ் காலால் சூடத்தை அணைத்த போக்குவரத்து காவலர் ஆய்வாளர்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டத்தின் போது பக்தர்கள் ஏற்றிய சூடத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதித்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி திருக்கோவில் சித்திரை தேரோட்டத்தின்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற தேருக்கு முன்பாக பழம், பூ வைத்து, தேங்காய் உடைத்து, சூடமேற்றி வழிபட்டனர்.
தேங்காய் உடைக்கவும், சூடம் ஏற்றவும் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சில பக்தர்கள் ஏற்றிய சூடத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதித்து அணைத்தார்.
Comments