போலீசுக்கு தண்ணி காட்டுவதாக நினைத்து பைக்கை முறுக்கிய இளசுகள்..! 16 வயது சிறுவன் பலி

0 2296

சென்னையில் நள்ளிரவு அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச்சென்று போலீசாரை இளைஞர்கள் அலைக்கழித்த நிலையில்  ஆலந்தூரில் 16 வயது சிறுவன் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தான்.

சென்னையில் நள்ளிரவில் விதிகளை மீறி பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் விரட்டிப் பிடிக்க முயன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

நள்ளிரவு இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடப்போவதாக கிடைத்த தகவலின் பேரில், பல பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணாசாலை, தேனாம்பேட்டை பகுதிகளில் விலையுயர்ந்த பைக் மற்றும் அதிக சிசி திறன் கொண்ட பைக்குகளில் இளைஞர்கள் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்ற போது இளைஞர்கள் நாலாபுறமும் அதிவேகமாக பைக்குகளில் தப்பிச் சென்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு விதிகளை மீறி பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்ட நபர்களின் 33 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, நேற்று சென்னை ஆலந்தூரில் 16 வயது சிறுவன் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தான். அவனுடன் பயணித்த மற்றொரு சிறுவன் கைகள் முறிந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, 18 வயதிற்குட்பட்டோர் வாகனத்தை ஓட்ட அனுமதித்தால் மோட்டார் வாகன சட்டப்படி வாகன உரிமையாளர் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments