மது குடிக்க வைத்து இங்கிலாந்து இளைஞர் கொலை : 6 ஆண்டுகளுக்கு பிறகு 58 பேர் மீது வழக்கு
போலந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த இங்கிலாந்துக்காரரை பார் ஊழியர்கள் அதிகளவு மதுகுடிக்க வைத்து கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 58 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு சுற்றுலா சென்றிருந்த 36 வயதான மார்க் மதுபோதையில் இருந்த நிலையில் அவரை நைட் கிளப் ஊழியர்கள் சிலர் தங்களது கிளப்பில் இலவச நுழைவு அனுமதி வழங்கப்படுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, 90 நிமிடங்களில் 22 Shots குடிக்க வைத்துள்ளனர். அதாவது, ஒன்றரை மணி நேரத்தில் சுமார் 2 ஃபுல் பாட்டில் மதுவை குடிக்க வைத்ததால் மயக்கமடைந்து கீழே விழுந்தவரிடமிருந்து 42 ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்தனர்.
ரத்தத்தில் பூஜ்யம் புள்ளி 3 அளவிற்கு மது கலந்திருந்தாலே அது மது விஷமாக மாறி விடும் நிலையில் ரத்தத்தில் பூஜ்யம் புள்ளி 4 அளவிற்கு மது கலந்திருந்ததால் மது மயக்கத்திலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments