ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வந்த 11 மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்பு

0 1921
ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வந்த 11 மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்பு

ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் சிக்கியிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூமுக்கு மேற்கே சுமார் 313 கிமீ தொலைவில் உள்ள பெட்வெல் தீவில் வெப்பமண்டல சூறாவளியில் 2 மீன்பிடி படகுகள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதில் இருந்த மீனவர்கள் 11 பேர் 6 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வந்த நிலையில் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments