அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்குமா...?
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் அளிக்கலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
அ.தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த அவகாசம் வருகிற 22 ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
Comments