ஏப்ரல் 25 திருவனந்தபுரம்-கண்ணூர் இடையே வந்தே பாரத் ரயில் தொடக்கம்

0 1653
ஏப்ரல் 25 திருவனந்தபுரம்-கண்ணூர் இடையே வந்தே பாரத் ரயில் தொடக்கம்

திருவனந்தபுரம்-கண்ணூர் இடையே புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வரும் 25ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இதற்காக பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர்  கேரளா வர உள்ளனர்.

கேரளாவின் வளர்ச்சிக்கு இந்த அதிவேக ரயில் முக்கியப் பங்காற்றும் என்று மத்திய அமைச்சர் வி.முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கேரள மக்கள் ஆர்வத்துடன் புதிய ரயிலை வரவேற்க காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

சுமார் 600 கிலோமீட்டர் தூரம் வரை கேரளாவின் தென் மற்றும் வடக்குப் பகுதிகளை இந்த ரயில் இணைக்க உள்ளது.ஒட்டு மொத்த கேரளாவையே எட்டு அல்லது 9 மணி நேரத்தில் கடந்து செல்வதற்கான வாய்ப்பை இந்த ரயில் ஏற்படுத்தும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments