வட அயர்லாந்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் 'நோயல் ஹனா' உயிரிழப்பு..!

0 1940

பத்து முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மலையேற்ற வீரர் நோயல் ஹனா, நேபாளத்தின் அன்னபூர்ணா சிகரத்திலிருந்து இறங்கிவரும் வழியில் உயிரிழந்தார்.

26 ஆயிரத்து 545 அடி உயர அன்னபூர்ணா சிகரம் உலகின் பத்தாவது உயரமான சிகரமாகும். அடிக்கடி பனிப்பாறைகள் சரிவதால் மிகவும் ஆபத்தானதாக கருதப்படும் அன்னபூர்ணா மலைத்தொடர் மீது ஏறும் முயற்சியில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட அயர்லாந்தைச் சேர்ந்த நோயல் ஹனா, அன்னபூர்ணா சிகரத்தின் உச்சியை தொட்டுவிட்டு நான்காம் நிலை கேம்பிற்கு திரும்பியபோது அங்கேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments