சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு "போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது" -உயர் நீதிமன்றம்
சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவது ஏற்கமுடியாது என தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என மீனவர்களிடம் அறிவுறுத்தும்படி அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தினர்.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, மீன் கடைகள் அமைக்கட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக்கூறி உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லூப் சாலை நடைபாதையில் உணவகங்கள் அதிகரித்துள்ளதாக கூறிய நீதிபதிகள், நடைபாதையில் உணவு சமைக்கப்படுவதை தடுப்பது மாநகராட்சியின் கடமை இல்லையா? என கேள்வி எழுப்பினர்.
மேலும், சாலைகள் சமையலறையாக பயன்படுத்தப்படுவதாகவும், சாலையில் 15 அடி வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Comments