உண்மைய சொல்லுங்கடா இது பஸ் நிறுத்தமா? இல்ல மணல் சிற்பமா ? புட்டுபோல உதிருது கட்டுமானம்
மதுரை அங்காடி மங்கலம் அருகே தொட்டால் உதிரும் மணல் சிற்பம் போல தரமற்ற முறையில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
பார்ப்பதற்கு பேருந்து நிறுத்த கட்டிடம் போல காட்சி அளித்தாலும் , தொட்டவுடன் தூண்களில் இருந்து சிமெண்டு பூச்சுகள் புட்டு போல உதிரும் அதிசயம் நிகழ்ந்த இடம் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட அங்காடி மங்கலம் அடுத்த கீழ வடக்கூர்..!
அமைச்சர் பி.மூர்த்தியின் மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட அங்காடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழவடக்கூர் கிராமத்தில் மத்திய அரசின் 15 வது நிதி குழு மனிய திட்டத்தின் கீழ், மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் சூரியகலா கலாநிதியின், நிதியிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை ஒன்று கட்டப்பட்டது.
இன்னும் சில நாட்களில் அது திறக்கப்படவுள்ள நிலையில் இந்த கட்டிட தூண்களை லேசாக தொட்டால் கூட சிமிண்ட் பூச்சு உதிர்வதாகவும், உடைவதாகவும் இளைஞர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் திறப்பு விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த பேருந்து நிறுத்ததை கட்டிய ஒப்பந்ததாரர் கணேசன் என்பவரிடம் விசாரணை நடத்திய நிலையில் சொல்லப்பட்ட மதிப்பீட்டை தாண்டி செலவாகிவிட்டதாகதெரிவித்தார். ஊராட்சி தலைவர் தங்கபாண்டியன் கூறும் போது, இளைஞர்கள் சிலர் நிழற்குடைக்கு கீழே அமர்ந்து மது அருந்தி செல்வதை தடுத்ததாலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக ஆத்திரத்தில் இப்படி வீடியோ எடுத்து பரப்பி விட்டனர் என்று தெரிவித்ததோடு, பேருந்து பயணியர் நிழற்குடை கட்டிடத்தை ஒப்பந்ததாரர் தரமான முறையில் கட்டிட்டம் கட்டி தந்தால் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.
இத்தகவல் வேகமாக பரவிய நிலையில் வட்டார வளர்ச்சி அதிகாரி வில்சன், பொறியாளர் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.
Comments