உக்ரைன் போர்: ரஷ்யாவிற்கு ஜி7 நாடுகள் கடும் எச்சரிக்கை..!
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இரசாயன, உயிரியல் அல்லது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ள ஜி7 நாடுகள், உக்ரைனிலிருந்து எந்தவிதமான நிபந்தனையும் விதிக்காமல் உடனடியாக ரஷ்யா வெளியேற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளன.
மேலும் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுத உதவி செய்யும் நாடுகளும் அதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. ஜப்பானின் கரூஜவாவில் ஜி7 நாடுகளின் 2 நாள் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ள ஜி7 நாடுகள், தைவான் விவகாரத்தை சுட்டிக்காட்டி சீனா பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
Comments