அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக அழைத்து சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று ஒடிசா மாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடுகபாளையம் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த ஆகாஷ் பைரவாவும், ஒடிசாவை சேர்ந்த முகந்தி சோனா என்ற இளம்பெண்ணும் கட்டிட வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், அதிக சம்பளத்தில் கட்டிட வேலை வாங்கி தருவதாக கூறி அவிநாசியில் உள்ள நண்பர் விரேந்திர் மீனா வீட்டிற்கு முகந்தி சோனாவை ஆகாஸ் அழைத்து சென்றதாகவும், அங்கு வைத்து விரேந்திர் மீனாவும் ஆகாசும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இருசக்கர வாகனத்தில் சோனாவை அழைத்து வந்து, திருப்பூர் சாலையில் விட்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.சோர்வாக இருந்த முகந்தி சோனா மயங்கவே, அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Comments