தரைதள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி

0 2238

கன்னியாகுமரி அருகே வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த 3வயது சிறுவனை காணவில்லை என தேடியபோது, பக்கத்து வீட்டு தரைதளத்திலுள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

வாணியக்குடி மீனவ கிராமத்தில் சுஜின் என்பவரின் 3-வயது மகன் ஷகிப் சேண்டினோ நேற்று மாலை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென காணாமல் போகவே, பெற்றோரும் உறவினர்களும் தேடியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் கிரகபிரவேசம் செய்யப்பட்ட பக்கத்துவீட்டின் தரைதளத்திலுள்ள தண்ணீர் தொட்டி மூடி திறந்திருந்ததை பார்த்தபோது சிறுவன் ஷகிப் சடலமாக கிடந்தான்.

புகாரின்பேரில் காவல்துறை விசாரணை நடத்தியதில், தரைதள தண்ணீர் தொட்டி மூடாமல் இருந்ததும், இது அறியாமல் சிறுவன் தவறி விழுந்து இறந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments