அம்மா.... இவங்க தான் கட்டி போட்டு மிதிச்சாங்க... சல்லி சல்லியான கண்ணாடி ஜன்னல்..! சொத்துக்காக ஒரு அக்கப்போர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றியதோடு, கயிற்றால் கட்டிபோட்டதாக குற்றஞ்சாட்டிய இளைஞர் தனது மாமா வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை சுத்தியலால் அடித்து சல்லி சல்லியாக உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்மா என்ன இவங்க கட்டிபோட்டு அடிச்சிட்டாங்க என்று ஒரு குழந்தை போல தனது தாயிடம் அழுதபடியே புகார் செய்ததோடு நிற்காமல், ஒரு சுத்தியலை எடுத்து மாமா வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை ஒவ்வொன்றாக போலீசார் முன்னிலையில் சல்லி சல்லியாக நொறுக்கும் இவர் தான் ஆவேச ஆனந்த்..!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே படியூர் பகுதியில் வசிக்கும் ஏசையன் என்பவருக்கும் அவரது சகோதரிக்கும் வீடு தொடர்பாக சொத்துப்பிரச்சனை இருந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சகோதரி மகன் ஆனந்த் என்பவர் பாகப்பிரிவினையில் தனது தாய்க்கு வரவேண்டிய பணத்தை தராமல் ஏசையன் காலம் கடத்தி வருவதாக கூறி தகராறு செய்துள்ளார். அப்போது ஆனந்தை ஏசய்யன் தூண்டுதலின் பேரில் அங்கிருந்த இளைஞர்கள் கயிற்றால் கை கால்களை கட்டிபோட முயல, ஆனந்த அந்த கயிற்றால் தனது கழுத்தை இருக்க , அங்கிருந்தவர்கள ஆனந்தின் கைகால்களை கட்டிபோட்டனர்.
அப்போது சாலையில் கட்டிபோடப்பட்டிருந்த ஆனந்தை, ஏசய்யன் காலால் மித்து தாக்கியதாக கூறப்படுகின்றது.
காவல்துறையினர் வந்த பின்பு கயிறுகளை அவிழ்த்து விட்டதாக கூறப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு ஆனந்தின் தாய் , மற்றும் சகோதரர் ஜெயக்குமார் ஆகியோர் வந்தனர். காயமடைந்த ஆனந்த், தனது தாயிடம் தன்னை கட்டிபோட்டு தாக்கியதாக அழுதபடியே தெரிவித்தார்.
காவல்துறையினர் தன்னை தாக்கியவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆவேசம் அடைந்து கையில் கிடைத்த சுத்தியலை வைத்து தனது சகோதரர் ஜெயக்குமாருடன் சேர்ந்து வீட்டின் டியூப் லைட், கண்ணாடி ஜன்னல்கள் சுவிட்ச் பாக்ஸ் என ஒவ்வொன்றாக அடித்து சல்லி சல்லியாக உடைத்தார்.
இதனை தடுக்க முயற்சி செய்யாத போலீசார் அவர் தாக்குவதை நிதானமாக செல்போனில் படம் பிடித்தபடி நின்றனர்.
உடைத்து முடித்த பின்னர் சுத்தியலை தனது தாயின் கையில் கொடுத்த ஆனந்த், அங்கு நின்ற தன்னை தாக்கிய ஒருவரை ஆபாசமாக திட்டியதோடு, தாயை அடிக்க சொன்னார்.
தன்னை தாக்கி விடுவார்களோ என்று அஞ்சி அவர் நடையை கட்டினார். வந்த வேலை முடிந்ததாக அவர்கள் மூவரும் பைக்கில் ஏறிச்சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் ஏசையன் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்து ஆனந்த், அவரது சகோதரர் ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்துள்ளதாக காங்கேயம் போலீசார் தெரிவித்தனர்.
Comments