சென்னை கலாஷேத்ரா விவகாரம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!
சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்த மாநில மகளிர் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற டி.ஜி.பி லத்திகா சரண் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள அந்த விசாரணை குழுவில், கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது என்றும், மாணவிகள் மற்றும் பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் 7 பேர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, மாணவிகளின் மனுவுக்கு பதிலளிக்கும்படி கலாஷேத்ரா அறக்கட்டளை மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். கலாஷேத்ரா நடவடிக்கையில் மாணவிகள் திருப்தியடையாததால் நீதிமன்றமே ஏன் விசாரணைக்குழுவை நியமிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பி உள்ளனர்.
Comments