விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்-பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக காவல்நிலையங்களில் விசாரணைக்கு வருவோர் மற்றும் புகார்தாரர்களின் பல்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வீர்சிங் மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களைக் கொண்டு கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பல் பிடுங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா 2வது நாளாக அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். அப்போது, 14 பேர் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரான நிலையில், 10 மணி நேரத்தையும் தாண்டி விசாரணை நடைபெற்றது.
Comments