தாளவாடி மலைப்பகுதியில் போக்கு காட்டி வந்த "கருப்பன்" யானை சிக்கினான்
ஈரோடு மாவட்டம் தளவாடி மலைப்பகுதியில் விளைநிலங்களைச் சேதப்படுத்தி வந்த காட்டு யானையான 'கருப்பன்' வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல மாதங்களாக பயிர்களை சேதப்படுத்தி வந்த கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சி 5 முறை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், சின்னத்தம்பி, மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகள் உதவியுடன் நேற்று 6வது முறையாக மயக்க ஊசி செலுத்தி கருப்பன் யானை பிடிக்கப்பட்டது.
இருப்பினும் ஆக்ரோஷத்துடன் இருந்ததோடு, லாரியில் ஏறாமல் கருப்பன் யானை முரண்டு பிடித்தது. இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன், கருப்பன் யானை லாரியில் ஏற்றப்பட்டது.
பிடிபட்ட கருப்பன் யானை பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாம் அல்லது தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments