திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருட்கள் மற்றும் ஊதுபத்திகள் கருகி சேதமடைந்தன.
நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ஞாயிறு அன்று ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வாணியம்பாடி, நாற்றம்பள்ளி, மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.
Comments