நவி மும்பையில் நடைபெற்ற பூஷன் விருது வழங்கும் விழாவில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் 11 பேர் உயிரிழப்பு

0 1647

மகாராஷ்ட்ரா மாநிலம் நவி மும்பையில் நடைபெற்ற பூஷன் விருது வழங்கும் விழாவின் போது, ஹீட் ஸ்ட்ரோக் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பல மணி நேரம் கடும் வெயிலில் நின்றிருந்ததால் ஹீட் ஸ்ட்ரோக் தாக்கி பலர் மயக்கமுற்றனர்.

அவர்களில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து நலம் விசாரித்தார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments