விஜய் வீட்டு கேமரா முன்பு அழுது ஆக்ட்டு கொடுத்த ரசிகை..! எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பார்த்தியா?

0 26893

நடிகர் விஜயின் வீட்டு வாசலில் குடும்பத்துடன் மண்டியிட்டு கும்பிட்டு அழுது, சிசிடிவி கேமரா முன் அட்ராசிட்டி செய்த ரசிகரின் குடும்ப வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். சங்கரின் மனைவி பெயர் இந்திரா. இவர்களது மகள் காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு தனது குடும்பத்துடன் சங்கர் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார்.

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் விஜய் ரசிகர் என்பதால், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

விஜய்யை எப்படியாவது பார்த்து விடலாம் என்ற ஆசையில் விஜய் வீட்டுக்கு சென்ற பொழுது மிகப்பெரிய கேட் ஒன்று பூட்டி இருந்துள்ளது.

இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமரா முன் தன்னை எப்படியாவது பார்க்க வருமாறு கெஞ்சி கொண்டிருந்துள்ளார் சங்கரின் மகள்.

இதனை சங்கர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட வீடியோவில் உங்களை பார்க்க வேண்டுமே என்னை எப்படியாவது பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் என்றும் வீடியோகாலில் குழந்தையுடன் பேசியது போல பேசுங்கள் என்றும் அந்த மாணவி கெஞ்சி உள்ளார்.

அந்த மாணவி தான் விவரம் அறியாமல் வீட்டு வாசலில் கெஞ்சுகிறாள் என்றால் புத்தி சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் தாயும் தந்தையும் அவளை விட வெகுளியாக விஜய்யை காண கையெடுத்து கும்பிட்டு கொடுத்த ஆக்டிங்கை பார்த்தோர் பரிதாபபட்டபடியே கடந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments