பொதுமக்கள் தாக்குதலில் மனநலம் பாதித்த இளைஞர் பலி..!

0 2521

சென்னை வளசரவாக்கத்தில் சிறுவர்களை தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை அங்கிருந்த பொதுமக்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார்.

வளசரவாக்கத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த நபர், கட்டையால் தாக்கியதில் 2 சிறுவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலர் அவரை கட்டையால் தாக்கியதில், மயக்கமடைந்தவரை அப்படியே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த போலீசார் இளைஞரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் இறந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து,  3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments