தாதா ஆதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன் ? கைதானவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்..!

0 5460

உத்திரப் பிரதேசத்திலுள்ள தாதாக்கள் மத்தியில் பிரபலமாவதற்காகவே ஆதிக் அகமதுவையும் அவனது சகோதரன் அஷ்ரப் அகமதுவையும் சுட்டுக் கொன்றதாக கைதான கொலையாளிகள் 3 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

லவ்லேஷ் திவாரி, மோஹித் என்கிற சன்னி, அருண் மெளரியா என்ற அந்த மூவரும் கடந்த வியாழக்கிழமையே பிரயாக்ராஜ் வந்து லாட்ஜில் அறையெடுத்துத் தங்கியுள்ளனர்.

ஆதிக் அகமதுவையும் அஷ்ரப் அகமதுவையும் மிக அருகில் இருந்து சுட வேண்டும் என முடிவு செய்து, பத்திரிக்கையாளர்கள் போல் போலி அடையாள அட்டை, மைக் போன்றவற்றுடன் இடுப்பில் துப்பாக்கிகளையும் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர். 3 பேரும் சேர்ந்து 22 விநாடிகளில் மொத்தமாக 20 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை சுட்டுக்கொன்ற மூவரையும், 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பிரயாக்ராஜ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மூவரும் பலத்த பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments