கேட்ட விலைக்கு பேனர் அச்சடித்து கொடுக்காததால், ஆத்திரத்தில் பேனர் அச்சக ஊழியரை தாக்கிய அதிமுக நிர்வாகி

0 2560

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேனர் அச்சக ஊழியரை அதிமுக நிர்வாகி தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த 13ஆம் தேதி ஆலங்காயத்தில் இயங்கி வரும் டிஜிட்டல் பேனர் அச்சகம் ஒன்றில் சிலர் அம்பேத்கர் பேனரை அச்சடிக்க ஆர்டர் கொடுத்துள்ளனர்.

அதற்கு தொள்ளாயிரம் ரூபாய் ஆகும் என கடை ஊழியர் செல்வராஜ் கூறிய நிலையில், 700 ரூபாய்தான் தருவோம் என வந்தவர்கள் கூறியுள்ளனர். பேரம் நீடித்த நிலையில், அங்கிருந்த அதிமுக கிளை செயலாளர் ஆர்.கே சாமி என்பவர் செல்வராஜிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

ஏற்கனவே அந்த நபர் அடித்த பேனருக்கு பணம் நிலுவையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில் செல்வராஜ் ஒப்புக் கொள்ளாததால் அவரைத் தாக்கியதாக, சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments