தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி

0 3100

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, தமிழகம் முழுவதும் 45 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கி நடைபெற்றது.

சட்ட ஒழுங்கை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி பெறப்பட்டது.

அதன்படி இன்று சென்னை கொரட்டூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், நீலகிரி, நாமக்கல், கோவை உட்பட 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments