ஆண்டுக்கு 2 முறை மட்டும் நிகழக்கூடிய நிழல் இல்லாத நாள் இன்று கொடைக்கானலில் தென்பட்டது..!
நிழல் இல்லாத நாள் நிகழ்வு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சில நிமிடங்கள் மட்டுமே தெளிவாக காணப்பட்டது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் நிகழக்கூடிய நிழல் இல்லாத நாள் இன்று கொடைக்கானலில் தென்பட்டது.
பூமியானது 23 டிகிரி சாய்ந்து அச்சரேகையில் சுற்றியபடி சூரியனையும் சுற்றி வருகிறது. அப்படி சுற்றும் போது சூரியனை நோக்கி சாய்ந்து இருக்கும் கோணமும் சிறிது சிறிதாக மாறி கொண்டே இருக்கும் நிலையில், அவ்வாறு மாறும் போது ஒரு சில நாட்களில் மட்டும் பூமியின் அச்சு சூரியனை நோக்கி சாயாமல் பக்கவாட்டில் இருக்கும்போது நிழல் நேர்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழுகிறது.
அந்நாளே நாள் நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாளாக அமைகிறது. இந்நிலையில், கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் நண்பகல் 12.20 மணியளவில், நிழலானது எந்த பக்கமும் சரியாமல் நேராக காலடியிலேயே இருக்கும் நிகழ்வினை வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் எபிநேசர் காட்சிப்படுத்தினர்.
இதுபோன்ற நிகழ்வு வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி நண்பகல் 12.22 மணிக்கு நிகழவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments