இங்கிலாந்தில் 'கிராண்ட் நேஷனல்' குதிரைகளுக்கானத் தடை தாண்டும் போட்டி.. முதலிடம் பிடித்த குதிரைக்கு ரூ.5 கோடி பரிசு..!
உலகப்புகழ் பெற்ற Grand National குதிரைகளுக்கான தடை தாண்டும் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்றது.
குதிரைகள் காயமடைந்து உயிரிழப்பதாக கூறி ரேஸ் கோர்ஸின் வேலியை பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட விலங்கு நல ஆர்வலர்கள் 118 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாமதமாகத் தொடங்கிய போட்டியில், தடையைத் தாண்டும்போது தடுக்கிவிழுந்து படுகாயமடைந்த Hill Sixteen என்ற குதிரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
7 பேர் குழுவினரால், பதினேழேகால் லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட கொராச் ராம்ப்லர் என்ற குதிரை 30 தடைகளையும் தாண்டி குதித்து முதலாவதாக வந்து, 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தட்டிச்சென்றது.
Comments