சென்னை பெரம்பூரில் களைக்கட்டிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. ஆடிப்பாடி மக்கள் உற்சாகம்!

0 5777

சென்னை பெரம்பூரில் தொடர்ந்து 4வது வாரமாக ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைக்கட்டியது.

சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர காவல்துறை சார்பாக புத்துணர்ச்சியூட்டும் விதமாக ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று பெரம்பூர் பெரியார் நகரில் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளானோர் பங்கேற்றனர்.

ஒரு புறம் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற, மறுபுறம் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டங்கள் களைக்கட்டின. சினிமா பாடல்களுக்கு ஏற்றவாறு இளைஞர்களும், இளம்பெண்களும் நடனமாடி குதூகலித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments