ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,175 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

0 11918

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,175 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க கோரி அவரது சகோதரரின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடை வள்ளல் ஆளவந்தாரின் வாரிசுகளான செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கோதண்டராமன், கஸ்தூரி, கவுசல்யா, கிருஷ்ணவேணி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆளவந்தாரின் 1,175 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிப்பதாகவும்,இதனை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன், ஆளவந்தாரின் 1914-ம் ஆண்டு உயிலின்படி  சொத்துக்களை ஒப்படைக்க கோரி அளித்த மனுவுக்கு பதிலளித்த  அறக்கட்டளை செயல் அதிகாரி, நீதிமன்ற உத்தரவின்படி சொத்துக்கள் அறக்கட்டளை வசம் உள்ளதாகவும்,அறக்கட்டளை தற்போது அறநிலையத் துறையின் கீழ் செயல்படுவதாகவும்,சொத்துக்களை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments