புதுச்சேரி - திண்டிவனம் 4 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

0 7225

புதுச்சேரி - திண்டிவனம் 4வழிச்சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தி பயன்படுத்தப்படாத நிலத்தை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சாலை அமைப்பதற்காக கடந்த 2010ம் ஆண்டு ஆல்பர்ட் இம்மானுவேல் என்பவர் உள்பட பல்வேறு நபர்களின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு அவர்களுக்கான இழப்பீடுகளும் வழங்கப்பட்டன.இந்த நிலையில் தங்களது நிலத்தை திரும்ப ஒப்படைக்க கோரி ஆல்பர்ட் இம்மானுவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள்,  சாலை அமைக்கும் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட மனுதாரர் உள்ளிட்டோரின் நிலங்களை திரும்ப அளிக்குமாறு  தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதே சமயம் சாலை அமைப்பதற்காக நிலம் தேவைப்படும் பட்சத்தில் சட்டப்படி கையகப்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.

மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு அளிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் 8 வாரத்திற்குள் திரும்ப அளிக்க நில உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், அவ்வாறு செலுத்தவில்லை என்றால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக ஆகிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments