ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்த சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா..!
ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்த தனது நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்ததற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சீனா மற்றும் ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஐந்து நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இதனால் சிறப்பு உரிமம் பெறாமல் இந்த நிறுவனங்கள் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வேறு எந்த நிறுவனங்களுடனும் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சீனா, இது சட்டவிரோத நடவடிக்கை என்றும், உலகளாவிய விநியோகச் சங்கிலியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Comments