'கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள கருத்தரங்க மேஜைகளில் மட்டும் போராட முடியாது' - பிரதமர் மோடி

0 1120

கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள, கருத்தரங்க மேஜைகளில் மட்டும் விவாதிப்பது பலனளிக்காது என்பதால், ஒவ்வொரு வீட்டின் உணவருந்தும் மேஜைகளில் இருந்தும் அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான கருத்தரங்கில் காணொலி மூலம் பிரதமர் பங்கேற்றுப் பேசினார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பு என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், அண்மை காலமாக இந்திய மக்கள் கடற்கரை, சாலைகள் போன்றவற்றை தூய்மையாக வைப்பதில் முனைப்பு காட்டுவதாக கூறிய பிரதமர், மக்கள் அன்றாட வாழ்வில் செய்யும் சிறிய செயல்கள் கூட அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணரும்போது, சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments