நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!
இத்தாலியில் நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
பணியிடத்தில் போதிய வசதிகளை ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் 80 சதவிகித ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால் ரயில்சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 65 சதவிகித உள்ளூர் ரயில் சேவைகளும், 40 சதவிகித விரைவு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
Comments