கருக்கலைப்பு மாத்திரை மீதான தடையை தற்காலிகமாக நீக்கிய அமெரிக்க உச்சநீமன்றம்!

0 1580

கருக்கலைப்பு மாத்திரைக்கு தடையை தற்காலிகமாக நீக்கிய அமெரிக்க உச்சநீமன்றம் புதன்கிழமை நள்ளிரவு வரை இடைக்கால அனுமதி அளித்துள்ளது.

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்க நீதிபதிகள் சிறிது அவகாசம் கோரியுள்ளனர்.

அமெரிக்காவில் கருக்கலைப்புக்காக பெரும்பாலோர் பயன்படுத்தும் மாத்திரையை புதன்கிழமை இரவு வரை விற்பனை செய்ய  அனுமதித்த உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் விதித்த தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பான FDA கருக்கலைப்பு மருந்து குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments