நியூயார்க் நகரத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் எலிகளை விரட்டுவதற்கு ரூ.1.26 கோடி சம்பளம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அதிகரித்துவரும் எலிகளை கொல்ல நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிக்கு, ஆண்டு ஒன்றிற்கு இந்திய மதிப்பில் ஒரு கோடியே 26 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.
தலைவலியை கொடுத்து வரும் எலிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நியூயார்க்-கில், சுமார் 80 லட்சம் எலிகள் இருப்பதாகவும், இதனால் அதிகமான சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
எலிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் வல்லுநரான கேத்லீன் கொர்ரடியை என்பவர் 'ரேட் சார்' துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எலிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அவற்றை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
Comments